பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
பாகூர்: மூலநாதர் சுவாமி கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி, நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரமோற்சவ விழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு, நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
அதிகாலை 4:00 மணிக்கு மூலநாதர், வேதாம்பிகையம்மன், பால விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக நடந்தது. காலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, 5:30 மணிக்கு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.