புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில் ராதா கல்யாணம்
ADDED :8 hours ago
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் ராதா கல்யாணம் உற்சவம் நடந்தது.
புதுச்சேரி, எல்லலைப்பிள்ளைச் சாவடியில் அமைந்துள்ள சிருங்கேரி சிவகங்கா மட சாரதாம்பாள் கோவிலில் நேற்று ராதா கல்யாண மகோற்சவம் நடந்தது. அதனையொட்டி, நேற்று மாலை தோடய மங்களத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. குரு கீர்த்தனைகள், கீத கோவிந்த அஷ்டபதி, ப்ர வர லக்னாஷ்டகத்துடன் கல்யாண உற்சவம் மற்றும் டோலோற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியினர் நடத்தி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உற்சவ ஏற்பாடுகளை சாரதாம்பாள் கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.