நாகை சப்தகன்னியர் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பக்தி பரவசம்
ADDED :120 days ago
நாகப்பட்டினம்; நாகை அடுத்த அக்கரைப்பேட்டையில் மிக பழமையான சப்த கன்னியர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகை அடுத்த அக்கரைப்பேட்டையில் மிக பழமையான சப்த கன்னியர் கோவில் அமைந்துள்ளது. மீனவர்கள் தங்களின் காவல் தெய்வமாக வழிபடும் இக்கோவிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 5 ம் தேதி அனுக்ஞை , மகா கணபதி பூஜைகளுடன் துவங்கியது. ஆறு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைத்ததையடுத்து நேற்று மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. நிகழ்ச்சியில் நாகை , காரைக்கால் , மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.