உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் மின்வாரிய துறை தலைவர் ராதாகிருஷ்ணன் தரிசனம்

உலகளந்த பெருமாள் கோவிலில் மின்வாரிய துறை தலைவர் ராதாகிருஷ்ணன் தரிசனம்

திருக்கோவிலூர்; மின்வாரியத் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

மின்வாரியத் துறை தலைவராக இருக்கும் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் குடும்பத்தாருடன் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு வருகை தந்து, சாமி தரிசனம் செய்தார். விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள தகவலை கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவில் நிர்வாகி கோலாகலன் தெரிவித்தார். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !