காங்கயம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் ஆண்டு விழா
ADDED :113 days ago
சூலூர்; காங்கயம்பாளையம் ஸ்ரீ சென்னி யாண்டவர் கோவிலில், நான்காம் ஆண்டு விழா நடந்தது.
காங்கயம்பாளையம் ஸ்ரீ சென்னி யாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, நான்காம் ஆண்டு விழா இன்று காலை கணபதி வழிபாட்டுடன் துவங்கியது. புனிதநீர் கலசங்கள் நிறுவப்பட்டு, சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை மற்றும் ஹோமம் நடந்தது. காலை,9:00 மணிக்கு, ஸ்ரீ சென்னியாண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசாபிஷேகம், திரவிய அபிஷேகம் நடந்தது. அலங்கார தீபாராதனைக்குப்பின், சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. கோவில் கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.