கமுதி சந்தன மாரியம்மன் சிம்ம வாகனத்தில் ஊர்வலம்
ADDED :17 hours ago
கமுதி: கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தில் சந்தன மாரியம்மன் வைகாசி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராம மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.
உற்ஸவர் சந்தன மாரியம்மன் தங்க நகை ஆபரணங்களுடன் சிம்ம வாகனத்தில் அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் தவழும் பிள்ளை துாக்கி ஊர்வலமாக சென்றனர். மக்கள் தேங்காய், பழம், பூஜை பொருட்கள் வைத்து சந்தன மாரியம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை ராமசாமிபட்டி மக்கள் செய்தனர். விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டனர்.