பிரதமர் 12 ஆண்டு சாதனையொட்டி லாஸ்பேட்டையில் சிறப்பு பூஜை
ADDED :108 days ago
புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி 12 ஆண்டு கால சாதனையொட்டி, லாஸ்பேட்டை வித்யா கணபதி கோவிலில் செல்வகணபதி எம்.பி., தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 12 ஆண்டுகால சாதனை ஆட்சியையொட்டி, பிரதமர் முழு உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து சிறப்பான சாதனை ஆட்சியை வழங்கிட வேண்டி, அனைத்து முக்கிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, லாஸ்பேட்டை தொகுதி, செல்லப்பெருமாள்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா கணபதி கோவிலில் செல்வகணபதி எம்.பி., தலைமையில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது.
நிகழ்ச்சியில் பா.ஜ., தொகுதி தலைவர் பன்னீர்செல்வம், மாநில நிர்வாகிகள் மகேஸ், மாவட்டத் தலைவர் உலகநாதன், ரமணா, சங்கர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.