புதுச்சேரி செங்கழுநீர் அம்மன் கோவிலில் 108 சங்கு அபிஷேகம்
ADDED :117 days ago
புதுச்சேரி: வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கும்பாபிஷேக துவக்க விழாவையொட்டி,108 சங்கு அபிஷேகம் நேற்று நடந்தது. வாழைக்குளம், அப்பாவு நகரில் செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேக 16ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை செங்கழுநீர் அம்மனுக்கு கலசாபிேஷகமும், தீபாரதனை நடந்தது.தொடர்ந்து, 108 சங்கு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.