காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்தேவி தாயார் உலா
ADDED :1 hours ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, வைகாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில், பெருந்தேவி தாயார் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் உட்பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.