உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் மதில் சுவர் கட்டும் பணி உதவி ஆணையர் ஆய்வு

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் மதில் சுவர் கட்டும் பணி உதவி ஆணையர் ஆய்வு

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் மதில் சுவர் கட்டும் பணியை உதவி ஆணையர் ஆய்வு செய்தார்.


செஞ்சி அடுத்த சிங்கவரம் மலைமீது ஆயிரம் ஆண்டுகள் பழமையான ரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலின் கொடிமரம் எதிரே இருந்த திருச்சுற்று மதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து விட்டது. இதை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக திருச்சுற்று மதில் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல் ஆய்வு செய்தார். இளநிலை பொறியாளர் ராகவன், சிங்கவரம் கோவில் அலுவலர் இளங்கீர்த்தி உடன் இருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !