உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எங்கிருந்தாலும் வாழ்க

எங்கிருந்தாலும் வாழ்க

இஸ்ரேல் மன்னர் தாவீதுக்கும், பத்சேபாவிற்கும் பிறந்தவர் சாலமன். இவரது ஆட்சிக் காலத்தில் வித்தியாசமான வழக்கு ஒன்று வந்தது. ஒரு குழந்தைக்காக இரண்டு பெண்கள் உரிமை கொண்டாடினர். இருவரின் வாதங்களையும் கேட்ட மன்னர்,  குழந்தையை சரி சமமாக வெட்டி ஆளுக்கு பாதியாக கொடுங்கள் என உத்தரவிட்டார். 

வாளால் வெட்ட தயாரான போது குழந்தையின் உண்மையான தாய், ‘‘வெட்டாதீர்கள். இக்குழந்தைக்கு நான் உரிமை கொண்டாட மாட்டேன். என் குழந்தை எங்கிருந்தாலும் பரவாயில்லை; உயிரோடு இருந்தால் போதும்’’ என அழுதாள். ஆனால் இன்னொருத்தியோ இரக்கமின்றி, ‘ ஆளுக்கு பாதியாக கூறு போடுங்கள்’’ என்றாள்.

அன்பின் சக்தி அளப்பரியது. அது பாவச் செயலை சகித்துக் கொள்ளாது’ என தீர்ப்பளித்து உண்மையான தாயிடம் குழந்தையை ஒப்படைத்தார் மன்னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !