தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் புதிய தேர் முதல் தளம் பொருத்த பூஜை
ADDED :4 hours ago
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோவிலில், புதிய தேர் செய்யும் பணியில், தேரின் முதல் தளம் பொருத்த பூஜை நடந்தது.
தொண்டாமுத்தூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் செய்யும் பணி கடந்த நான்கு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இத்தேர், 25½ அடி உயரமும், 12½ உயரத்தில், சுவாமி பீடமும், 9½ அடி அகலத்திலும், தேர் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில், இத்தேர் செய்யும் பணியில், முதல் தளம் அமைக்கும் பணிக்கான பூஜை நேற்று நடந்தது. கணபதி ஹோமம் நடத்தி, புனித நீரை தேர் முழுவதும் தெளித்து, பூஜை செய்து, முதல் தளம் பொருத்தும் பணி துவங்கப்பட்டது. இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.