உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவிலுக்கு 37 சவரன் மதிப்பிலான தங்கக் கிரீடம் காணிக்கை

குருவாயூர் கோவிலுக்கு 37 சவரன் மதிப்பிலான தங்கக் கிரீடம் காணிக்கை

பாலக்காடு; கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 37 சவரன் எடை கொண்ட நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க கிரீடத்தை, திருப்பூரைச் சேர்ந்த ஆடைத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் ராஜன் பி. நாயர், காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.  கோவில் சோபனா படியில் வைத்து நடந்த நிகழ்வில் கோவில் நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ், துணை நிர்வாகி ராதா, உதவி மேலாளர் ஹரிதாஸ் மற்றும் ராஜன் பி. நாயரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !