/
கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து அருள்பாலித்த தாயார்
காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து அருள்பாலித்த தாயார்
ADDED :104 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு சாமிக்கு வெவ்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை கோயிலில் தாயாருக்கு மூலவர் சன்னதி எதிரில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவ மூர்த்தியை அங்குள்ள பெரிய கண்ணாடியில் அம்மனை காண்பித்து மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மன் உற்சவ மூர்த்தியை மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, கோயிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் கோயில் அர்ச்சகர்கள், வேதப் பண்டிதர்கள் கலந்து தரிசனம் செய்தனர்.