தேவி மாரி அம்பிகை கோவிலில் 50ம் ஆண்டு திருவிழா விமரிசை
செய்யூர்: கெங்கதேவன்குப்பத்தில் உள்ள தேவி மாரி அம்பிகை கோவிலில் 50ம் ஆண்டு திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கெங்கதேவன்குப்பம் கிராமத்தில் தேவி மாரிஅம்பிகை கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பால்சாகை திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். இந்தாண்டு 50வது திருவிழாவை விமரிசையாக நடத்த, விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை 9:00 மணிக்கு அம்பிகைக்கு மஹா அபிஷேகம் நடந்தது. பின் முக்கிய நிகழ்வாக பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மதியம் 2:00 மணிக்கு நடந்தது.
இதையடுத்து இரவு, மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் தேவி மாரி அம்பிகை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கெங்கதேவன்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று மாலை 6:00 மணிக்கு அம்பிகைக்கு விடையாற்றி அபிஷேகம் நடந்தது.