காணிப்பாக்கம் வரதராஜ ஸ்வாமி கோவிலில் சத்தியநாராயண விரதம்
ADDED :1 days ago
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு விநாயகர் கோவிலின் துணைக் கோவிலான ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ ஸ்வாமி கோவிலில் வெகு விமரிசையாக சத்தியநாராயண ஸ்வாமி விரதம் நடைபெற்றது. கோயில் அர்ச்சகர்கள் முன்னதாக வரதராஜ சுவாமி சன்னதி அருகில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சத்யநாராயண விரதப் பூஜையில் ஈடுபட்டனர்.