உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டையூரில் புரவி எடுப்பு விழா

கோட்டையூரில் புரவி எடுப்பு விழா

காரைக்குடி: கோட்டையூர் ஊமகுள வட ஐயனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது.

கோட்டையூர் ஊமகுள வட ஐயனார் கோயில் புரவி எடுப்பு விழா ஜூன் 26ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் காப்பு கட்டு தலுடன் தொடங்கியது.

ஜூன் 27ம் தேதி ஊமகுள வட ஐயனார் கோயிலில் இருந்து கும்பம் எடுத்து வந்து கோட்டை நாச்சியம்மன் கோயிலில் வைத்து தீபம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து மாலையில் குதிரைகளுக்கு கண் திறந்து தீபம் பார்த்தல் நடந்தது. ஜூன் 28 குதிரை மற்றும் கும்பத்திற்கு விசேஷ பூஜை நடந்தது.

நேற்று காலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாலையில் குதிரைகளை கோயிலில் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !