உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராம கோவில் பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்

கிராம கோவில் பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், பூஜாரி களுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம், கோசுவாமி மடத்தில் நேற்று தொடங்கியது.

கோவில்களில் செய்யும் மந்திரங்கள், அபிஷேகம், அலங்கார முறைகள், தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் பாடல்கள் கற்பித்தல் குறித்து, பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. முகாம், 15 நாட்கள் நடக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, 150 பூஜாரிகள் பங்கேற்றனர்.

கிராம கோவில் பூஜாரிகள் பேரவை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமை வகித்தார். கோவை சரவணம்பட்டி சிரவை ஆதீனம் ஆசியுரை வழங்கினார்.

மாநில கிராம கோவில் பூஜாரிகள் பேரவை அமைப்பாளர் சோமசுந்தரம், சென்னை சுவாமி விவேகானந்தா மெடிக்கல் மிஷன் தலைவர் ஸ்ரீவத்சன், மாவட்ட சேவா பாரதி துணை தலைவர் சுடலை, வி.எச்.பி., மாநில இணை பொதுசெயலர்கள் ஆர்.ஜி.ராமசுப்பு, ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். வி. எச்.பி., மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !