உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

வெள்ளி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

நடுவீரப்பட்டு: நைனார்பேட்டை வெள்ளி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

நடுவீரப்பட்டு, நைனார்பேட்டையில், கைலாசநாதர் கோவிலை சேர்ந்த வெள்ளி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை 2ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த, 29ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை நடந்தது.

நேற்று காலை கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, நவக்கிரஹ ஹோமம் நடந்தது. மாலை வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.

இன்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

நாளை காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து நாடி சந்தானம், தத்துவார்ச்னை, 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு கடம் புறப்பட்டு, கோவில் உலா வந்து, 9:30 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு அபிஷேகத்தை தொடர்ந்து, இரவு வெள்ளி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக்குழு, கும்பாபிஷேக குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !