உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 5ம் தேதி சம்ப்ரோஷணம் நடைபெறுவதை ஒட்டி இன்று மகா சாந்தி ஹோமம் நடந்தது.


நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கோபுரங்கள், கோவில் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு வரும் 5ம் தேதி மகாசம்ப்ரோஷணம் நடக்கிறது. முன்னதாக நேற்று xயாகசாலை பூஜைகள் துவங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை 8:30 மணிக்கு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலை மண்டபத்தில் அக்னி காரியங்கள் துவங்கி புண்யாக வாசனம், அக்னி ப்ரதிஷ்டை, கும்ப ஆவாகனம், ஆராதனம், அகல்மஷ ஹோமம், மகா சாந்தி ஹோமம், பூர்ணாகுதி, சாற்றுமுறை நடந்தது. மாலை பிரதான ஹோமங்கள், புர்ணாகுதி, சாற்றுமறை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 5ம் தேதி வரை காலை மாலை இருவேளையும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில், நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஏஜென்ட் கோலாகலன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !