உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி ஹசரத் சையத் யூசுப்ஷா அவுலியா தர்காவில் சந்தனகூடு உற்சவம்

செஞ்சி ஹசரத் சையத் யூசுப்ஷா அவுலியா தர்காவில் சந்தனகூடு உற்சவம்

செஞ்சி: செஞ்சி பீரங்கிமேடு ஹசரத் சையத் யூசுப்ஷா அவுலியா தர்காவில் சந்தன கூடு விழா நடந்தது. இதை முன்னிட்டு 26ம் தேதி சந்தை தோப்பு ஹசரத் சையத் இஸ்மாயில் ஷா அவுலியா தர்காவிலும்,


ஹசரத் சையத் யூசுப்ஷா அவுலியா தர்காவிலும் பிறை கொடியேற்றி பாத்தியா ஓதினர். 29ம் தேதி இரவு 7 மணிக்கு ஹசரத் சையத் யூசுப்ஷா அவுலியா தர்காவில் சந்தனகூடு விழாவை முன்னிட்டு சிறப்பு பாத்தியா ஓதினர். இதில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டார், பொது விருந்தை துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி, முன்னாள் நகர செயலாளர் காஜா நஜீர் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு 10 மணிக்கு சிலம்பாட்டம், மற்றும் வீர விளையாட்டுகளுடன் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !