உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாசிபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு விழா

பாசிபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு விழா

தொண்டி: தொண்டி அருகே பாசிபட்டினம் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழா நடந்தது.தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா அமைந்துள்ளது. இங்கு உருஸ் எனும் மத நல்லிணக்க விழா கொடியேற்றம் ஜூன் 20 ல் நடந்தது. அதனை தொடர்ந்து முதல் நாள் இரவு தலை பிறையும், ரத ஊர்வலமும் 29 ல் ஹத்தம், தமாம், சிறப்பு பயான் விருந்து உபசரிப்பும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, மாணவநகரி, ஸ்தானிகன் வயல் கிராமத்திலிருந்து புறப்பட்டது. எஸ்.பி.பட்டினம் மருங்கூர் வழியாக சென்று இன்று அதிகாலை 4:00 மணிக்கு பாசிபட்டினம் தர்காவை மூன்று முறை வலம் வந்து தர்கா முன்பு நிறுத்தப்பட்டது. விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜூலை 15 ல் கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பாசிபட்டினம் விழாக் குழுவினர் செய்திருந்தனர். மத ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக நடந்த இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !