பெரியபட்டினம் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்
பெரியபட்டினம், பெரியபட்டினம் வடக்கு புதுக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று மூலவர் அம்மன் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை கோயில் முன்பு ஒயிலாட்டம் நடந்தது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம் சென்று ஊரணியில் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை பெரியப்பட்டினம் வடக்கு புதுக்குடியிருப்பு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* வண்ணாங்குண்டு அருகே நாகநாத சமுத்திரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இரவில் நாள்தோறும் பெண்களின் கும்மியாட்டமும், ஆண்களின் ஒயிலாட்டமும் நடந்தது. நேற்று நேர்த்திக்கடன் பக்தர்கள் அக்னி சட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை 4:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஊரணியில் முளைப்பாரி கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை நாகநாத சமுத்திரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.