கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில் வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ADDED :32 minutes ago
காஞ்சிபுரம்; கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில், இன்று அக்னி வசந்த பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இன்று காலை, 9:00 மணி அளவில் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் யாக சாலை பூஜையும், 10:45 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. சிவாச்சாரியர்கள் அக்னி வசந்த பெருவிழா கொடியை ஏற்றினர். சமய கணகாச்சாரி குமார மக்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. தினசரி, சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லதா குழுவினரின் மகாபாரத சொற்பொழிவு நடைபெற உள்ளது. ஜூலை 8ம் தேதி இரவு முதல் தாந்தோன்றியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரால் நாடகம் நடைபெற உள்ளது.