உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம்

வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம்

 வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயிலில் 3 நாள் பிரமோத்ஸவம் இன்று துவங்கியது.


இதை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு பகவத் அனுக்ஞை, வாசுதேவ புண்யாக வாசனம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, திவ்ய பரந்த பாராயணத்துடன் விழா துவங்கியது. இன்று காலை 6:00 மணிக்கு மேல் ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், கும்ப மண்டல பிம்ப திருவாராதனம், அக்னி பிரதிஷ்டை, பூர்ணாஹூதி நடந்தது‌. பின்னர் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சேது நாராயண பெருமாள் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை (ஜூலை 2) மதியம் 3:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள், அனுமந்த வாகன புறப்பாடு, நாளை (ஜூலை 3) காலை 5:30 மணிக்கு கருட சேவை, பின்னர் தீர்த்தவாரி நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !