நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2 hours ago
நெல்லிக்குப்பம்: ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம், அய்யப்பன் கோவிலில், திருப்பணிகள் முடிந்து கடந்த 1 ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வழிபாடு துவங்கியது. நவக்கிரக ஹோமம்,கோ பூஜை, தீபாராதனை உள்ளிட்டவைகள் நடந்தன. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.