உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக பாலாலயம்

 புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக பாலாலயம்

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் முடிய உள்ளது. இதையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில் கும்பாபபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கும்பாபிேஷக பாலாலயம் பணி நேற்று துவங்கியது.காலை 10:30 மணிக்கு துவங்கிய நிழ்ச்சியில், மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன், விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவில் திருப்பணிகளை பத்து மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கும்பாபிேஷக பணிகள் நடக்கும் நாட்களில், மணக்குள விநாயகருக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் தொடர்ந்து நடக்கும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்பாடுகளை கோவில் சிவாச்சார்யார்கள் கணேஷ், நாகராஜ், சீனு ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !