மேலாய்க்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்
ADDED :9 hours ago
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. கோயிலில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து மண்டல பூஜைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை 7:31 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நிறைவடைந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு மூல மந்திர ஜெப ஹோமங்கள் மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து, காலை 10:30 மணிக்கு மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு மகாஅபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்திற்கு செய்தனர்.