பெரியூர்பட்டி வடக்கு பார்த்த காளியம்மன் கோவில் திருவிழா
ADDED :8 hours ago
செந்துறை; செந்துறை அருகே பெரியூர்பட்டி வடக்கு பார்த்த மகாகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஜூன். 26- காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் நேற்று முன்தினம் காலை சாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அக்னிசட்டி, கிடாய் வெட்டுதல் மற்றும் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கபட்டது. பின்னர் நேற்று காலை அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.