மாங்காடு வேம்புலி மாரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :8 hours ago
காஞ்சிபுரம் ; குன்றத்தூர் வட்டம், மாங்காடு, அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலின் உபகோயிலான வேம்புலி மாரி அம்மன் திருக்கோயிலில் கடைசியாக சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் கடந்த மார்ச் 02ம் தேதி பாலாலயம் நடைபெற்று திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் நேற்று 05ம் தேதி காலை 5.30 மணியளவில் திருக்குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. திருக்குடமுழுக்கு விழாவில் இத்திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி ஆர்.சீனிவாசன், கே.சித்ராதேவி, திருக்கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர், திருப்பெரும்புதூர் சரக ஆய்வாளர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இத்திருக்குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேம்புலி மாரிஅம்மனை தரிசனம் செய்தனர்.