உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாஷ் யாத்திரை புறப்பட்டது முதல் குழு; ருத்ராட்ச மாலைகள் அணிவித்து வாழ்த்து

கைலாஷ் யாத்திரை புறப்பட்டது முதல் குழு; ருத்ராட்ச மாலைகள் அணிவித்து வாழ்த்து

 ருத்ரபிரயாக்: உத்தரகண்டின் லிபுலேக் கணவாய் வழியாக நடக்கும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக் கான முதல் குழுவினரை, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.


சம்பாவத் மாவட்டம், டனக்பூரில் நடந்த நிகழ்ச்சியில், யாத்ரீகர்களுக்கு ருத்ராட்ச மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ‘‘கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது ஆன்மிக உணர்வு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம்,’’ என்றார். முதல் குழுவில், தமிழகம் உட்பட, 13 மாநிலங்களைச் சேர்ந்த 34 ஆண்கள், 15 பெண்கள், ஒரு டாக்டர் உட்பட, 49 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில், ராஜஸ்தானைச் சேர்ந்த, 68 வயது புருஷோத்தம் கன்டெல்வால் மூத்த யாத்ரீகராகவும், குஜராத்தைச் சேர்ந்த, 21 வயது ஹரிகிருஷ்ணா இளைய யாத்ரீகராகவும் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் துவங்கியது. தற்போது, உத்தரகண்டின் லிபுலேக் கணவாய் மற்றும் சிக்கிமின் நாதுலா கணவாய் வழியாக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !