உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில் கும்பாபிஷேகம்

போடி தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில் கும்பாபிஷேகம்

போடி: போடி அருகே தீர்த்தத்தொட்டி ஆறுமுக நாயனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.


போடி-தேனி மெயின் ரோட்டில் தீர்த்தத் தொட்டி ஆறுமுக நாயனார் கோயில் அமைந்து உள்ளது. இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பின் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கும்பாபிஷேக யாக குண்டல ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். செயல் அலுவலர் சுபிதா தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !