நல்லவருடன் பழகு என்கிறார் ராமகிருஷ்ணர்
* நல்லவருடன் பழகு. உன் மனம் துாய்மை பெறும்.
* சம்பாதித்ததை பிறருக்காக செலவு செய்து சந்தோஷப்படு.
* கடவுளை வெளியில் தேடாதே. அவர் உனக்குள்ளேயே இருக்கிறார்.
* பக்தி செய்வதே கடவுளை அடைய எளிய வழி.
* கடவுளிடம் முறையிட்டால் பாவம் நீங்கும்.
* கற்பக விருட்சம் போல வாரி வழங்கும் வள்ளல் கடவுள்.
* ஆணவம் இருக்கும் வரை கடவுளை நெருங்க முடியாது.
* பசுவைத் தேடும் கன்று போல, கடவுளை அடைய முயற்சி செய்.
* வேண்டியவர், வேண்டாதவர் என பாரபட்சம் கடவுளுக்கு கிடையாது.
* பெண்கள் அனைவரும் ஆதிபராசக்தியின் அம்சம்.
* அமைதியே ஞானத்தின் முதல் அடையாளம்.
* எந்த நிலையிலும் கலங்காதவனே ஞானி.
* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்துகின்றன.
* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு கொடு. மனச்சமநிலையை இழக்க மாட்டாய்.
* உண்மை எது, பொய் எது என பிரித்தறிய பழகு.
* விடாமுயற்சி உள்ளவனுக்கு உலகில் எதுவும் சாத்தியமே.
* தியானம் கைகூட உருவ வழிபாடு உதவி செய்யும்.