உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் தங்கமுத்து மாரியம்மன் கோவில் ஆண்டு விழா

சூலூர் தங்கமுத்து மாரியம்மன் கோவில் ஆண்டு விழா

சூலூர்: ரங்கநாதபுரம் ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு விழா நடந்தது.


சூலூர் அடுத்த ரங்கநாதபுரம் கே.என்.கே.,நகரில் உள்ள ஸ்ரீ தங்க முத்து மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, நேற்று முன்தினம் காலை விநாயகர் பூஜையுடன் ஆண்டு விழா துவங்கியது. 108 புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு, மகா கணபதி, மகாலட்சுமி, மகா மாரி ஹோமங்கள் நடந்தன. மதியம், 12:00 மணிக்கு, தங்கமுத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !