உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாண்டவர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

பெரியாண்டவர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பெரியாண்டவர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.


நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றின் கரையில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த மாதம் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அன்று முதல் தினமும் மண்டலபிஷேக பூஜை நடந்தது. நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. பெரியாண்டவர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு தீபாராதனை செய்து, யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கலசங்கள் ஆலயத்தை சுற்றி வலம் வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !