உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் கொடி மரத்தின் அருகே 18ம் நுாற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

திரவுபதியம்மன் கோவில் கொடி மரத்தின் அருகே 18ம் நுாற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கொடி மரத்தின் அருகே, நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. நடுகல் குறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது: இந்த கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல், ஒரு போர் வீரனின் நினைவாக நிறுவப்பட்ட கல்லாகும். இந்த கல்லில் இருக்கும் வீரனின் தலைபாகையும், காதுகளில் அணிகலன்களும் உள்ளன. தோல்பட்டை, இடை, மணி கட்டு ஆகிய பகுதிகளில் அணிகலன் அணிந்துள்ளது. வலது கரத்தில் கத்தியை மேல் நோக்கி உயர்த்தி பிடித்துள்ளது. இடது உள்ளங்கையில் ஒரு கிண்ணமும், கழுத்து, இடுப்பு, மார்பு என, பல்வேறு பகுதிகளில் அணிகலன்கள் அணிந்துள்ளது. இந்த சிலை 18ம் நுாற்றாண்டை சேர்ந்தது என, தொல்லியல் துறையினர் உறுதிப் படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !