பழநி முருகன் கோயில் ஆண்டு வருமானம் ரூ.103 கோடி; கோயில் நிர்வாகம்
பழநி: பழநி முருகன் கோயிலில் கடந்த பசலி ஆண்டு கோயில் வரவு ரூ.103.24 கோடியாக அதிகரித்துள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழநி முருகன் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இவர்களிடமிருந்து கோயில் நிர்வாகம் சார்பில் தரிசன டிக்கெட், பஞ்சாமிர்த விற்பனை, ரோப்கார், வின்ச் கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வகையான விதத்தில் வருமானம் கிடைத்து வருகிறது. தமிழகத்தில் அதிக வருமானம் தரும் முதன்மையான கோயிலாக பழநி முருகன் கோயில் உள்ளது. ஜூன் 30., ல் கடந்த பசலி ஆண்டு 1435 நிறைவடைந்தது. பசலி ஆண்டு நிறைவு நாள் வரை கோயில் வருவாய் ரூ.100 கோடியை முதல் முறையாக கடந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த பசலி ஆண்டில் ரூ.103 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 525 கிடைத்துள்ளது. இதுவரை கிடைத்த மொத்த ஆண்டு வருவாய் விட அதிக அளவு கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த பசலி ஆண்டில் உலக பிரசித்தி பெற்ற பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்த விற்பனை ரூ.63 கோடியே 116 லட்சத்து 7ஆயிரத்து 320 க்கு விற்பனை ஆகி உள்ளது என பழநி கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.