உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்திய நாகரிகப் பயணத்தின் நிலையான அடித்தளம் தர்மம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

இந்திய நாகரிகப் பயணத்தின் நிலையான அடித்தளம் தர்மம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

புதுடில்லி; புது தில்லியில் உள்ள இந்தியா ஹாபிடாட் சென்டரில், இந்தியா ஃபவுண்டேஷன் (India Foundation) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேற்று ஆற்றிய ஆசியுரை ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தது. பண்டைய காலத்தையும் சமகாலத்தையும் இணைக்கும் ஞானம், இந்தியாவின் நாகரிகப் பயணத்தின் நிலையான அடித்தளமாகத் திகழும் தர்மம் குறித்து அவர் எடுத்துரைத்து, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஆசி வழங்கினார். முன்னதாக டில்லி மலைமந்திர் கோவில் மஹா கும்பாபிஷேகம் 5ம் தேதி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.  கும்பாபிஷேகம் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் முன்னிலையில் வைத்தியநாத சிவாச் சாரியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக் தர்கள் பங்கேற்றனர். விழாவில் டில்லி மாநகர வளர்ச்சிக்கழக துணைத்தலைவர் சரவணகுமார், உச்சநீதிமன்ற நீதிபதி நரசிம்மா, டில்லி போலீஸ் டிஜிபி ஆனந்த் மோகன், டில்லி மாநகர நகர்ப்புற வளர்ச்சிக் கழகத் தலைவர் தாரா, மலை மந்திர் அறங் காவலர் குழுத் தலைவர் நீதிபதி ராம மூர்த்தி, நீதிபதி கற்பகவிநாயகம், கல்யாணராமன், மலை கோவில் மந்திர் தலைவர் பாலசுப்பிர மணியன், துணைத் தலை வர்கள் சுவாமிநாதன், முகுந்தன், இணைச் செய லாளர்கள் பாலமூர்த்தி, பூர்ணிமா சுவாமிநாதன், டில்லி தமிழ் சங்கதலைவர் சிவபால முனைவர் முருகன், துணைத்தலை வர் செல்வராஜ் மகேந்தி ரன், பொதுச் செயலாளர் சத்யா அசோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !