திருப்புத்துார் மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு பைரவ யாகம்
ADDED :1 hours ago
திருப்புத்தூர்: திருப்புத்துார் அருகே டி.வைரவன்பட்டி மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் மூல பாலகால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு மகா பைரவயாகம் நடைபெற்றது. பைரவர் சன்னதி முன்பாக சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நெய், வஸ்திரம், புஷ்பம், மகாபூர்ணாகுதி நடத்தினர். யாகத்திற்கு தீபாராதனை காண்பித்தனர். புனித நீர் கலசத்திற்கு அடுக்கு, பஞ்சமுகம், கும்பம், நாகம், ஒற்றை, கற்பூர தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை காண்பித்தனர். ஏராளமான பக்தர்கள் பூசணி, தேங்காய், அகல் விளக்கில் தீபமேற்றி பைரவரை வழிபட்டனர்.