அரண்மனைப்புதுார் மாகாளியம்மன் கோவில் மண்டல பூஜை துவங்கியது
ADDED :56 minutes ago
திருப்பூர்: திருப்பூர், அரண்மனைப்புதுார் முதல் வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நான்கு கால யாக வேள்விகளுடன் கடந்த ஜூலை 5-ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, தற்போது கோவிலில் மண்டல பூஜை துவங்கி, தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பக்தர்கள் வழிபாட்டுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., பாலமுருகன் துவக்கி வைத்தார். கோவில் கமிட்டி திருப்பணிக்குழு நிர்வாகிகள் பிர்லி துரை, கே.பி.ஜி.பலராம், சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.