சிங்கப் பெண்ணே...
ADDED :82 days ago
பெண் குழந்தைகள் துணிச்சல் மிக்கவர்களாக வாழ கீழ்க்கண்டதை பின்பற்றுங்கள்.
* குழந்தைகளின் மனதில் பதியும்படி நல்லதைச் சொல்லுங்கள்.
* சாதனை பெண்களின் வரலாறு, செய்திகளை சொல்லுங்கள்.
* தரமான கல்வி, கலைகளை கற்க ஏற்பாடு செய்யுங்கள்.
* ‘நான் சாதிக்க பிறந்தவள்’ என்ற மந்திரத்தை மனதில் பதியுங்கள்.
* உண்மையை உரக்கச் சொல்வதில் தயக்கம் கூடாது.
* அன்பு, பாசம், பரிவுடன் நடத்துங்கள்.
* தடையை உடைத்தெறிந்து முன்னேற கற்றுக் கொடுங்கள்.
* பொது இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என பழக்குங்கள்.
* பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க வழி காட்டுங்கள்.
* பிறர் முன்னிலையில் கடுஞ்சொற்களை பேச வேண்டாம்.
பின்ன என்ன... உங்கள் வீட்டுப் பெண் குழந்தையும் சிங்கப்பெண்ணாக திகழ்வாள்.