உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் மகா மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் மகா மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.


இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்; 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !