உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீறு பூசு என்று வலியுறுத்துகிறார் அவ்வையார்

திருநீறு பூசு என்று வலியுறுத்துகிறார் அவ்வையார்

* திருநீறு பூசாத நெற்றி பொலிவுடன் இருக்காது.
* சுறுசுறுப்பாக செயல்படு. எல்லாம் உன் வசமாகும்.  
* உன் உழைப்பில் வாழ்வதே உண்மையான கவுரவம்.
* எல்லோரிடமும் இனிமையாகப் பேசு.  
* நல்லவரோடு பழகு. அவர்களின் அறிவுரையே உனக்கு சொத்து.
* தர்மம் செய்வதில் எப்போதும் விருப்பம் கொள்.  
* நல்ல செயல்களை முன்னின்று செய்.  
* இளமைக் காலமே படிப்பதற்கு ஏற்ற காலம்.  
* உனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கும் சொல்லிக்கொடு.
* எதையும் கூடுதலாக பேசாதே. சொல்வதை தெளிவாகச் சொல்.
* பாடுபட்டு செல்வம் சேர்த்தாலும் விதிப்படிதான் அனுபவிக்க முடியும்.  
* அதிகாலையில் கண் விழித்ததும் கடவுளை வணங்கு.
* தாயை விடப் பெரிய கோயிலும், சிறந்த தெய்வமும் இல்லை.
* உன் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் கடவுளின் செயலே.
* அரிசியும் நீரும் இல்லாத வெறும் பானையில் பொங்கல் பொங்கி வருமா? அதுபோல் நல்லதை செய்தால் தானே நல்லது கிடைக்கும்.  
* பெருமை தரும் வழியில் சென்று கொண்டே இரு.
* அதிகமாக சாப்பிடாதே. இல்லாவிட்டால் கஷ்டப்படுவாய்.  
* நன்றாக யோசித்த பிறகு ஒரு செயலில் இறங்கு.  
* குணவதியான பெண் உள்ள வீட்டில் எல்லா நன்மையும் நிறைந்திருக்கும்.
* நல்ல நுால்களை தேடிப்படி. அறிவு வளரும்.
* வறுமையான காலத்திலும் நல்லவர்களின் குணம் மாறாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !