உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை முதல் ஆரத்தி விவகாரம் தேவஸ்தான உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்து

திருமலை முதல் ஆரத்தி விவகாரம் தேவஸ்தான உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்து

பெங்களூரு: திருமலை வெங்கடேஸ்வரருக்கு முதல் ஆரத்தி காண்பிப்பது குறித்த முதல்வர் சிவகுமாரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பதி திருமலை தேவஸ்தான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பதி திருமலையில் வெங்கடேஸ்வரருக்கு காண்பிக்கப்படும் முதல் ஆரத்தி மைசூரு அரச குடும்பத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இதில், ‘கர்நாடகாவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நீதிபதிகள் பங்கேற்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற உள்ளேன்’ என, முதல்வர் சிவகுமார் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு, திருப்பதி திருமலை தேவஸ்தானம் உறுப்பினர் பானு பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்தார். ‘திருப்பதி கோவில் ஆந்திர அரசு, திருப்பதி திருமலை தேவஸ்தான உறுப்பினர்கள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் விதிகளை மாற்றியமைக்கவோ அல்லது புதிய சட்டம் இயற்றவோ கர்நாடக அரசால் முடியாது’ என்றார். இந்நிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் மற்றொரு உறுப்பினரான எஸ்.நரேஷ்குமார், ஆரத்தி விஷயத்தில் முதல்வர் சிவகுமாரின் கருத்தை வரவேற்று உள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருமலை முதல் ஆரத்தி விஷயத்தில் முதல்வர் சிவகுமாரின் கருத்து வரவேற்புக்குரியது. முதல் ஆரத்தியில் கர்நாடகாவை சேர்ந்த அரசியல்வாதிகள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க வேண்டும். திருப்பதி திருமலை தேவஸ்தான உறுப்பினர் பானு பிரகாஷ் முதல்வரின் அறிக்கையை முழுதாக புரிந்து கொள்ளாமல் எதிர்த்து வருகிறார். இவ்விவகாரத்தில் கோவிலின் பாரம்பரியம், வரலாற்று பின்னணி, தற்போதைய விதிமுறைகளை ஆராய்ந்து திருப்பதி திருமலை தேவஸ்தான உறுப்பினர்கள் வாரியம் சிவகுமாரின் கருத்துக்கு சாதகமான முடிவை எடுக்கும். மத ரீதியான நடைமுறைகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டும் முதல்வருக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !