உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லதைச் செய்தால் நன்மை உண்டாகும்: புத்தர்

நல்லதைச் செய்தால் நன்மை உண்டாகும்: புத்தர்

* நல்லதைச் செய். அந்த நன்மை உன்னை காக்கும்.   
* பிறரிடம் உள்ள குறைகளை பார்க்காதே. உன்னிடம் உள்ள குறைகளை கவனி.  
* உன்னை நேசிக்க கற்றுக்கொள். பிறரை வெறுக்கமாட்டாய்.
* எண்ணத்தால் கூட பிறருக்கு தீங்கு நினைக்காதே.  
* நல்ல மனிதனாக வாழ்ந்தால் இயற்கையே உனக்கு துணை நிற்கும்.  
* ஆசையே துன்பத்திற்கு காரணம். முடிந்தவரை அதை தவிர்த்திடு.    
* உலகில் எப்போதும் உண்மை ஒன்றே நிலைத்திருக்கும்.  
* அதிகாரத்தால் காரியம் சாதிப்பவன் நல்லவனாக இருக்கமாட்டான்.
* உனக்கேற்ற காலம் வரும். அப்போது முயற்சியில் வெற்றி பெறுவாய்.
* வாழ்க்கை என்றால் இன்பம், துன்பம் இருக்கத்தான் செய்யும்.
* கேட்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என நம்பாதே.
* நீ செய்யும் செயல்கள் அனைத்தும், நிழல் போல உன்னை தொடரும்.  
* மனதில் இருப்பதை சொல். இல்லாவிட்டால் மவுனமாக இரு.
* யார் சொல்கிறார் என்பதை விட, அவர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே நீ அறிஞனாக முடியாது.
* தக்க சமயத்தில் உனக்கு உதவி செய்பவனே நல்ல நண்பன்.    
* மனதை கட்டுப்படுத்து. இல்லாவிட்டால் அது உன்னை கட்டுப்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !