ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா
ADDED :6 days ago
திருப்பூர்: திருப்பூர், கருவம்பாளையம் சின்னசாமி கவுண்டர் லேஅவுட்டில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.
கடந்த 14-ம் தேதி தொடங்கிய விழா 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் மாலை மகா அபிஷேகம், அலங்கார பூஜை, சிறப்பு சக்தி வழிபாடு மற்றும் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் தொழில்வளம் மற்றும் உலக நலன் வேண்டி விழா நடத்தப்படுவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.