அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் கிணற்றில் தூய்மை பணி
ADDED :6 days ago
அன்னூர்; மன்னீஸ்வரர் கோவில் கிணற்றில் தூய்மை பணியில் நடந்தது.
பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 120 ஆண்டுகளுக்கு மேலான கோவில் கிணறு உள்ளது. 70 அடி ஆழ கிணற்றில், 50 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் குப்பைகள், பாட்டில், மூடிகள் ஆகியவை இருந்தன. கிணற்றில் முழுமையாக தூய்மைப்படுத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. கிணற்றில் இருந்த குப்பைகள், பாட்டில்கள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டன. கிணற்றில் மேல் பகுதியில் இரும்புச் சட்டங்கள் பொருத்தப்பட்டு கிணற்றின் மேல் பகுதி மூடப்பட்டது. இத்துடன் தங்கத்தேர் நிறுத்துவதற்கான கொட்டகை அமைப்பதற்கான மேல் தள கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது. இப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் மற்றும் அறங்காவலர்கள் பார்வையிட்டனர்.