உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுவாமி வீதியுலா

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுவாமி வீதியுலா

 ரிஷிவந்தியம்: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்திருவிழாவில், ராவனேஸ்வரர் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.


ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர்திருவிழா நடப்பது வழக்கம். ஆனால், கோவிலில் திருப்பணிகள் நடந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக தேர்திருவிழா நடைபெறா நிலையில், கடந்த 16ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தேர்திருவிழா துவங்கியது. கடந்த 17ம் தேதி கோவில் பலி பீடம் அருகே உள்ள கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, பஞ்சமி திதியில் கொடியேற்றப்பட்டு சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து, 9 நாட்களுக்கு தினமும் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகமும், பூஜைகளும் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராவனேஸ்வரர் வாகனத்தில் உற்சவர் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 25ம் தேதி (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !