உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் கிளி வாகனத்தில் ஆண்டாள்

திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் கிளி வாகனத்தில் ஆண்டாள்

 திருவொற்றியூர்: ஆடிப்பூர நட்சத்திரத்தையொட்டி, ஆண்டாள் கோதை நாச்சியார், கிளி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார்.


திருவொற்றியூர், காலடிப்பேட்டை – கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடிப்பூர நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம், உத்சவர் பவள வண்ண பெருமாள் சமேத ஆண்டாள் கோதை நாச்சியாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, வரலாற்றில் முதன்முறையாக, ஆண்டாள் கோதை நாச்சியார், கிளி வாகன புறப்பாடு நடந்தது. அதன்படி, பிரமாண்ட மலர் அலங்காரத்தில் கிளி வாகனத்தில் எழுந்தருளிய தாயார், நான்கு மாடவீதிகளில் உலா வந்தார். மாடவீதிகளில் காத்திருந்த பக்தர்கள், அர்ச்சனை, தீபாராதனை காண்பித்து, ஆண்டாள் தாயாரை, மனமுருக வேண்டிக் கொண்டனர். முன்னதாக, பெருமாள் வேடமணிந்தவர்கள் ஊர்வலத்தின் முன் அணிவகுத்தது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !