புதுச்சேரி வேம்படியம்மன் கோவில் ஆடி திருவிழா
ADDED :3 days ago
புதுச்சேரி: முதலியார்பேட்டை, புவன்கரே வீதி வேம்படியம்மன் கோவிலில் முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் அன்னதானம் வழங்கினர். புதுச்சேரி, முதலியார்பேட்டை தொகுதி புவன்கரே வீதியில் அமைந்துள்ள வேம்படியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி, முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., மாநில துணை தலைவருமான பாஸ்கர் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில், கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.